1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Periyar statue insulted in Thanjavur

பெரியார் சிலைக்கு காவித்துண்டு! – தேர்தல் வரும் நிலையில் பரபரப்பு!

Thanjavur
தமிழக சட்டமன்ற தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தஞ்சை அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுதல் மற்றும் காவி துண்டு அணிவித்தல் போன்ற சம்பவங்கள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இரவோடு இரவாக காவித்துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கி.வீரமணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?