சைடு வாங்கி மின்கம்பத்தில் உரசிய பஸ்; மின்சாரம் தாக்கி பயணிகள் பலி! – தஞ்சாவூரில் சோகம்!

Thanjavur
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:39 IST)
தஞ்சாவூரில் தனியார் பேருந்து ஒன்று சாலையில் ஓரமாக ஒதுங்கியபோது மின் வயர்கள் பயணிகள் மீது உரசி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் – கல்லணை வழியாக செல்லும் தனியார் பேருந்து ஒன்று வழக்கம்போல சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் செல்ல வழிவிடும் வகையில் ஒரமாய் ஒதுங்கியது. சாலை குறுகலாக இருந்ததால் வண்டி ஓரம்கட்டப்பட்டபோது பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் சரிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது சாய்ந்தது.

இதனால் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றிருந்த பயணிகள் மீது மின் வயர்கள் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :