1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Periyar road name change issue explaination

பெரியார் சாலை பெயர் மாற்றப்படவில்லை.. ஆனால்..! – தமிழக நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்!

Chennai
சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான சர்ச்சைக்கு தமிழக நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் சில வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக நெடுஞ்சாலை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில் பெரியார் ஈவேரா சாலை பெயர் மாற்றப்படவில்லை என்றும், சென்னை மாநகராட்சி தரவுகளின்படி அந்த சாலை பெரியார் பெயரில் அழைக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே ஆவணங்களில் Grand Western Trunk Road என்றே உள்ளதாகவும், ஆவணங்களில் இன்றும் அதே பெயரில் தொடர்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் பெண்களின் கண்ணீர் கதைகள்