அமைச்சர் அன்பில் மகேஷை நீக்க சொல்லி ட்ரெண்டிங்! – காரணம் என்ன?
தமிழக கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷை பதவியிலிருந்து விலகும்படி சமூக வலைதளங்களில் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டவர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வியில் அன்பில் மகேஷ் மேற்கொள்ளும் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவதும் பின்னர் திரும்ப பெறப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. முன்னதாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மூலமாக செயல்படுத்த எடுக்கப்பட்ட முடிவு கண்டனத்திற்கு உள்ளானதால் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதியை நியமித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். ஆனால் பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது கட்சியை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பல ட்விட்டரில் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். அதேசமயம் முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பியதும் திரும்ப பெறப்படுவது போல இந்த பதவி நியமனமும் திரும்ப பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.