திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (14:16 IST)

ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

sreemathi
மாணவி ஸ்ரீமதியின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்,  அவருக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டதுடன், பள்ளி வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மாணவி மரணம் குறித்து தனியார் பள்ளி மீதும், கலவரம் தொடர்பாக கலவரக்காரர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள என்பதா மாணவி ஸ்ரீமதியின் இல்லத்திற்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது பெற்றோர்க்கு  ஆறுதல் கறிம் அவது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும், மாணவி ஸ்ரீமதி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்  அதுதான் மாணவிக்கு நாம் அஞ்சலியாக இருக்கும் என தனது டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.