செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (16:32 IST)

கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்! – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம், கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்ட நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியில் படித்த மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர் – ஆசிரியர்களின் கருத்துகளை தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து இன்று அறிவிப்பு வெளியிட்ட அவர், கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும் அப்பள்ளி மாணவர்களை சுற்று பகுதியில் உள்ள மற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், பெற்றோர்கள் தங்கள் விரும்பும் பள்ளியில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.