#செருப்புபிஞ்சிரும்அண்ணாமல… டிவிட்டரில் காரசாரம்!
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியதை தொடர்ந்து #செருப்புபிஞ்சிரும்அண்ணாமல டிரெண்டிங்.
சமீபத்தில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று மதுரைக்கு வந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.
அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் நிதியமைச்சர் அஞ்சலி செலுத்தி சென்ற உடன் அஞ்சலி செலுத்தலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீசியதாக தெரிகிறது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #செருப்புபிஞ்சிரும்அண்ணாமல என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பெரும்பாகானோர் தேசிய கொடியை வீட்டில் ஏற்றுங்கள், டிபி மாற்றுங்கள் என்று கூறும் பாஜக தேசிய கொடி பறக்கம் கார் மீது செருப்பு வீசலாம என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த சம்பவம் சற்று நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக இருக்கப்போகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.