வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (13:04 IST)

அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகள் ஆண்டது… முதல்வர் உளறல்!

அமெரிக்கா நம் நாட்டை 200 ஆண்டுகள் அடிமையாக்கி ஆண்டது என உத்தரகாண்ட் முதல்வர் உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சர்ச்சைக்குரிய முதல்வராக மாறிவருகிறார் உத்த்ரகாண்ட் முதல்வர், தீரத் சிங் ராவத். கிழிந்த ஜீன்ஸ்களை அணிவது, அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் அதிக ரேஷன் கிடைக்குமே என கூறியது என சமுகவலைதளங்களில் கேலிக்குரியவராக ஆகிவருகிறார் அவர்.

இந்நிலையில் இப்போது ’அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகள் ஆண்டது.. ஏன் உலகையே ஆண்டது. ஆனால் இப்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. சூரியன் மறையாத ராஜ்ஜியம் திண்டாடுகிறது’ எனக் கூறினார். இந்தியாவை ஆட்சி செய்தது பிரிட்டன் என்று கூட தெரியாமல் இப்படி பேசுகிறாரே என்று அவரைப் பற்றிய கிண்டல்களும் மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.