திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (12:47 IST)

கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை… மக்கள் நம்புவார்களா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

தமிழக தேர்தலை ஒட்டி தீவிர தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது திருவண்னாமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர் கருணாநிதியே ஸ்டாலினை நம்பாமல் அவரைக் கட்சி தலைவராக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய அவர் ‘திமுக தலைவர் கருணாநிதியே ஸ்டாலினை நம்பி கட்சித்தலைவர் பதவியைத் தரவில்லை. 2 ஆண்டுகாலம் அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது கூட ஸ்டாலினை நம்பி தலைவராக்கவில்லை. அப்படி இருக்கையில் மக்கள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள். நாங்கள் நல்லது செய்வதால் மீண்டும் மீண்டும் மக்கள் எங்களுக்கு ஆட்சியை தருகிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.