வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: முதல்வர் அறிவிப்பு

கடந்த 2019 மட்டும் 2020 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் பல புதிய மாவட்டங்கள் உருவானது என்பது தெரிந்ததே 
 
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என பிரிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாவட்டம் உருவாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது கூறினார். இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்