தூத்துக்குடி துப்பாக்கி சூடு: வழிப்பறி, கொள்ளை என வழக்கு பதிவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இண்டஹ் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
ஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முதற்கட்டமாக 7 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.
அதாவது, கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொள்ளை, கொலை வெறி தாக்குதல், பிறருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், தவறான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.