1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (12:58 IST)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ! மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்...

தூத்துகுடியில் பல ஆண்டுளாக இயங்கி வந்த ஸ்டெர்லெட் காப்பர் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மே மாதம் நடந்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய தூப்பாகிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் . இதில் ஏராளமான மக்கள் காயமடைந்தனர்.
அதன் ஏற்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு  வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லை காப்பர் ஆலை கடந்த சில மாதங்கலுக்கு முன் சீல் வைக்கப்பட்டது.இனி தமிழகத்தில் தூத்துக்குடி மககளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என்று தமிழக அர்சு உறுதியளித்திருந்தது.
 
இந்நிலையிலையில் சில நாட்களாகவே வேதாதா குழுமத்தின் சார்பில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்ட்லைட் ஆலையை திறக்கப்போவதாகவும், அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்நிறுவனம் பிரபல பத்திரிக்கைகளில் வாயிலாக விளம்ப்ரம் செய்தது மட்டுமல்லாமல், தூத்துக்குடி பகுதியை சுற்றியுள்ள மக்கல் தங்கள் வாழ்வாதாரத்திறகாக காப்பர் ஆலையை நம்பிய்ர்ர் இருப்பதாகவும் அதனால் மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைஇயங்கப் போவதாக செய்திகள் வெளியிட்டிருந்தார்கள் .
 
இதனை தொடர்ந்து மாசு ஏற்படுத்தும் வகையில் 3.50 லட்சம் டன் கழிவுளை உப்பாறு, தனியார் பட்டா நிலங்களில் கொட்டியதாக புகார் எழுந்தது.இதனால் மக்களுக்கும் , தனியார் பட்டா உரிமையாளர்களூக்கும் பல்வேறு பாதிப்புகள் ட்டீ ஏற்படுவதாக கூறி முத்துமாறன்  என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தாவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இன்று  கேள்வி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நெல்லையை சேர்ந்த முத்துராமன் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 12க்குள் பதில் தர ஆட்சியர் ,மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.