1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People complaint about S Ve Shekar speech

காவியை நீக்கிவிட்டு தேசிய கொடி ஏற்றுவாரா முதல்வர்? – எஸ்.வி.சேகர் மீது அவதூறு வழக்கு!

Tamilnadu
சமீபத்தில் எஸ்.வி.சேகர் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் தேசிய கொடி குறித்து மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக எஸ்.வி.சேகர் மீது புகார் எழுந்துள்ளது.

சமீப காலமாக பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தமிழக அரசு மீது பல்வேறு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பலர் கூறி வந்த நிலையில் எஸ்.வி.சேகர் வழக்குத் தொடரப்பட்டு போலீஸ் வந்தால் தலைமறைவாகி விடுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தலைவர்கள் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது போன்ற செயல்களில் முதல்வர் கண்டம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவங்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்த தவறான தகவல்களை பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

தேசிய கொடியில் உள்ள காவி நிறம் சுதந்திரத்திற்காக மக்கள் சிந்திய குருதியை நினைவுப்படுத்தும் பொருட்டு உள்ளதாக பாடங்களில் உள்ள நிலையில் அதை மதத்தோடு தொடர்புப்படுத்தி பேசியுள்ள எஸ்வி சேகர் ’தேசிய கொடியில் உள்ள காவி நிறத்தை நீக்கிவிட்டு முதல்வர் கொடி ஏற்றுவாரா என கேள்வி எழுப்பியதாகவும், இது உள்நோக்கத்துடன் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தேசிய கொடியை பற்றிய தகவல்களை திரித்து கூறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அரசு பள்ளிகளில் அட்மிசன் ஆரம்பம்! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!