வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:58 IST)

வெடிப்பொருட்களுடன் சுற்றும் திடீர் மனிதன்! – சீர்காழி மக்கள் அச்சம்!

சீர்காழியில் பாஸ்பரஸ் போன்ற வெடி மருந்துகளுடன் ஆசாமி ஒருவர் இரவு நேரங்களில் உலா வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியின் விளந்திடசமுத்திரம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூரை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டிப் மீது பாஸ்பரஸ் உருண்டையை வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த மர்ம நபர் சீர்காழியின் பல தெருக்களில் வெடி மருந்துகளுடன் இரவில் உலா வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் இரவில் வெளியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.