தொடர்புடைய செய்திகள்
- செல்வ செழிப்போடு இருக்க லட்சுமி குபேர வழிபாடு...!
- புஸ்வானம் ஆகுமா தீபாவளி கொண்டாட்டங்கள்? நாளை கனமழை
- 10 நாட்களுக்கு பட்டைய கிளப்பும் ஆஃபர்: பிஎஸ்என்எல் காம்போ 78!
- தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்: சென்னை போலீஸ் எச்சரிக்கை
- மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது: டெல்லியில் முதல் நடவடிக்கை
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி: பொதுமக்கள் செம ஹேப்பி
பொதுமக்கள் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நாடெங்கும் தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளிக்காக துணி, பலகாரம், நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கடைவீதிகளுக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் இன்று தீபாவளி என்பதால் மக்கள் விடியற்காலை எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தலை தீபாவளி கொண்டாடும் ஜோடிகளுக்கு தட புடலான விருந்து தான், வரவேற்பு தான். தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
