வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (11:12 IST)

புஸ்வானம் ஆகுமா தீபாவளி கொண்டாட்டங்கள்? நாளை கனமழை

வடகிழக்கு பருவமழை எப்போது துவங்கும் என எதிர்ப்பார்த்து வந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பருவமழை துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் நல்ல மழை பொழிந்தது, நேற்றும் இன்றும் மழைக்கான அறிகுறி தெரியவில்லை. 
 
நாளை தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தீபாவளி அன்று மழை பெய்யுமா? என பொதுமக்களும் குழந்தைகளும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழ்நாட்டு வெதர்மேன் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார். 
 
ஆனால், இதற்கு நேர்மாறாக வானிலை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாளை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை முடிவு செய்து அரசு தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முட்டுக்கடை போட்டது. இப்போது கனமழை அறிவிப்பு கொண்டாட்டங்களை புஸ்வானம் ஆக்கியுள்ளது.