செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 நவம்பர் 2018 (13:38 IST)

மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது: டெல்லியில் முதல் நடவடிக்கை

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது என்பது தெரிந்ததே. அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்காமல் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சுப்ரீம் கோர்ட் நேரக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பதிவாகும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கைது செய்யப்பட்ட நபர் பட்டாசு வெடிக்கவில்லை. அவரது மகன் தான் பட்டாசு வெடித்துள்ளார். மகன் பட்டாசு வெடித்ததை தந்தை தடுக்கவில்லை என்ற காரணத்தால் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தந்தைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.