வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நிலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோடிக்கணக்கானோர் தினமும் ஊதித்தள்ளும் சிகரெட்டால் பாதிக்காத சுற்றுச்சூழல், லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் வெளியிடும் புகையால் பாதிக்காத சுற்றுச்சுழல் ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்ற தீர்ப்பை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகர பகுதியில் அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் என்றும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீஸ் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.