வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (10:38 IST)

10 நாட்களுக்கு பட்டைய கிளப்பும் ஆஃபர்: பிஎஸ்என்எல் காம்போ 78!

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை தீபாவளியை முன்னிட்டு நாடு முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. 
 
ஆம், ரூ.78 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சலுகை 10 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல், அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. 
 
மேலும், தினமும் 2 ஜிபி டேட்டா என்ற கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 20 ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்படும். 
 
குறிப்பு: வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் எஸ்டிவி காம்போ78 என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.