தொடர்புடைய செய்திகள்
- நடிகர் ராணாவை கலாய்த்த விஷ்ணு விஷால்…இப்படியும் வாழ்த்து கூறுவார்களா?
- 30 ஆண்டுகளாக ...என்னுடன் இருப்பது நீ மட்டும்தான் – கவின் உருக்கம் !
- மூச்சுத் திணறல் சிகிச்சைக்குப் பின் பிரபல நடிகர் டிஸ்சார்ஜ்...
- ரொம்ப நாளா பிட்டு போடுற பையன் சிக்க மாற்றான் - ஹரிஸ் கல்யாணுடன் நெருக்கமாக ரைசா!
- மீரா மிதுன் குறித்து சர்ச்சையான ட்விட் போட்ட ஜோ மைக்கேல்!
உதய சூரியன் இப்போ உதய் சூரியன்! – சூரிய வெளிச்சத்திற்காக பார்த்திபன்!?
தனது படங்களிலும், பேச்சுகளிலும் நூதன பகடியை கலந்து பேசும் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் திமுக குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாக்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் நூதனமான பகடியை பேசக்கூடியவர். சமீப காலமாக படங்களில் நடித்து வந்த இவர் ‘ஒத்த செருப்பு’ போல சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில படங்களை இயக்கியும் வருகிறார்.
அரசியல் குறித்து தீவிரமான எந்த கருத்தையும் பேசியிராத பார்த்திபன் தற்போது திமுக குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “உதய சூரியன் உதய் சூரியனாகிறதாம்! சிறுக சிறுக கதிர்கள் பெருக....” என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவில் முக்கிய முடிவுகளில் உதயநிதியிடமும் கலந்து ஆலோசிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் பார்த்திபனின் கருத்து அதற்கு இணையாக உள்ளது. இதனால் பார்த்திபன் திமுக மறைமுக ஆதரவாளரா அல்லது விரைவில் திமுகவில் இணைய போகிறாரா? என்பது போன்ற கேள்விகளும் உலா வரத் தொடங்கியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
