புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:07 IST)

ரொம்ப நாளா பிட்டு போடுற பையன் சிக்க மாற்றான் - ஹரிஸ் கல்யாணுடன் நெருக்கமாக ரைசா!

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர்  "வேலையில்லா பட்டதாரி 2"  படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமா திரையில் அடியெடுத்து வைத்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நிறைய காதல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை இருவரையும் மறுத்து வந்தாலும் ரேசாவுக்கு ஹாரிஸ் கல்யாண் மீது ஒரு கண்ணு இருக்கு என்பதை அவரே நிறைய பேட்டிகளில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பியார் பிரேமா காதல்" படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் என்று கேப்ஷன் கொடுத்து ஹரிஷ் கல்யாண் மடியில் அமர்ந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " நீயும் ரொம்ப நாளா பிட்டு போடுற பையன் சிக்க மாற்றான்" என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பலரும் அதென்னவோ உண்மை தான் என கூறி வருகின்றனர்.