காவிரி மேலாண்மை அமைக்கும் வரை விடமாட்டோம் - துணை சபாநாயகர் தம்பிதுரை

Thambidurai
Last Updated: திங்கள், 19 மார்ச் 2018 (20:55 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.

 
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. அதிமுக எம்பிக்கள் வெளிப்படையாக மத்தியா அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
தமிழக சட்டசபையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் டெல்லியில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அதிமுக எம்பி தம்பித்துரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :