குரங்கணி காட்டுத்தீ: முதல்வர் விளக்கம்!
திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து நீண்ட விளக்கம் கொடுத்தார்.
தேனி அடுகே குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றம் செய்த கல்லூரி மாணவர்கள் காட்டுத்தீ விபத்தில் சிக்கியதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக சட்டசபையில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான திமுக குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட விளக்கம் கொடுத்தார்.
இந்திய வன நில அளவை நிறுவன அறிக்கையின்படி கடைசியாக தீ விபத்து ஏற்பட்ட நாள் 15.02.2018. மலையேற்றத்துக்கு அனுமதி இல்லாத பகுதிகளில் சென்றதுதான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது என்று கூறினார்.