1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (17:58 IST)

மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வி அடைந்துவிட்டது - மன்மோகன் சிங்

வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு ஆகும்.
 
இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
 
வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்த பாஜக அரசு தோல்வியடைந்து. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.ஸ்.டி வரி விதிப்பு ஆகியவையால் பல சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்து விட்டது என்று கூறியுள்ளார்.
 
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதியிலும் பாஜக அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து மற்ற கட்சிகள் பாஜகவின் தோல்வி ஆரம்பமாகிவிட்டது என்று கூறினர். இதை குறிப்பிடும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தோல்வி அடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.