1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Parisal ban to Hokenakal river

ஒகேனக்கல் வெள்ளம்: 6வது நாளாக பரிசலுக்குத் தடை

ஒகேனக்கல்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது வருகிறது என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஒகேனக்கல் ஆற்றில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் காரணமாக ஏற்கனவே பரிசலுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று 6வது நாள் ஆகும் பரிசலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் பரிசலுக்கு தடை என்ற அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
அடுத்த 1 மணி 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!