வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (09:41 IST)

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்வு - 2ம் கட்ட எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்வு - 2ம் கட்ட எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதன் காரணமாக இரண்டாம்கட்ட எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு சப்பாத்து, உப்புதரை என இடுக்கி அணை வரையிலான நீரோட்டத்துக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அந்த பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்ந்து அதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது