திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (09:18 IST)

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது பெற்றோர் போலீஸ் புகார்!

rape
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவர் மீது சிறுமியின் பெற்றோர் போலீஸ் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தன் பட்டி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் ஐந்தாம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்ததாகவும் இனிமேல் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இதனை அடுத்து அந்த சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் இந்த புகாரில் உண்மை தன்மை இருந்தால் உடனடியாக ஆசிரியர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.