1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (10:18 IST)

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை

lkg
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5000 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
சமீபத்தில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடத்துவது இல்லை என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அதன்பிறகு எல்கேஜி யுகேஜி வகுப்புகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்று அறிவித்தது. 
 
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5000 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது
 
விரைவில் இந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு , வரும் விஜயதசமிக்குள் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்