ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார் என்றும், கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் சலவை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் முதலில் வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார் என்றும், அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கியுள்ளார் என்றும், முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
அதேபோல் சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்றும், கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது
Edited by Mahendran