வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (09:15 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது.. தீவிர விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பெண் தாதா அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று தனிப்படை போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டனர்.

 சென்னையில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் அவரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 48 வயதான அஞ்சலை ஆற்காடு சுரேஷ்க்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் நிலையில் பழிக்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவர் பதவியில் இருந்த அஞ்சலை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

Edited by Mahendran