வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (15:51 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி நடக்கலாம்? உளவுத்துறை எச்சரிக்கை..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கு பழிக்குப் பழி கொலை நடக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆம்ஸ்ட்ராங்  கொலை செய்யப்பட்ட 16 வது நாளில் பழிக்கு பழி வாங்கும் கொலை நடக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலைக்கு காரணமானவருக்கு நெருக்கமானவர்கள் யாராவது கொலை செய்யப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நாளை 16 வது நாள் காரியம் என்பதால் நாளைய தினம் கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்க வேண்டும் என்று சபதம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. நாளை 16வது நாள் காரியம் நடக்கும் போது எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva