புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:39 IST)

12 ஆம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை செலுத்த உத்தரவு - அரசு தேர்வுகள் இயக்குனர்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20 வரை  மாணவர்கள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு ரூ.175 கட்டணம்செலுத்த வேண்டும் என  அரசு தேர்வுகள் இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு  தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.