தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!
- விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!
- திமுக, அதிமுக, பாஜக, பிரமுகர்கள் தவெகவில் இணைகிறார்களா? எப்போது? எங்கு?
- ஆட்சி அதிகாரத்தை வைத்து விஜய்யை பயமுறுத்த முடியாது! - நடிகர் சௌந்தரராஜா!
- அதிமுகவுடன் கூட்டணி இல்லை, தனித்து போட்டியிட விஜய் விரும்புகிறார்: பிரசாந்த் கிஷோர்
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக கட்சியின் தலைமை நிலைய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை, சென்னைதேதி: 07.03,2025 வெள்ளிக்கிழமைநோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28மக்ஃரிப் தொழுகை: மாலை, மணி 6.35 (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva
