1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (14:42 IST)

நெல்லையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை சடலம் கண்டெடுப்பு!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
சமீப நாட்களாக பச்சிளம் குழந்தைகளை வீசிவிட்டு செல்வதும், குப்பை தொட்டியில் போடுவதும் என தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பிறந்து சில மணி நேரங்களேயான ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கழிப்பறையில் இறந்து கிடந்தது. 
 
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் அமுதாதேவி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து  கழிவறை வழியாக கழிவு நீர்த் தொட்டிக்குள் போட்டு சென்ற நபருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகள் கொண்டு அங்கு வந்து சென்ற கர்ப்பிணி குறித்தும், மருத்துவமனையில் பிறந்த குழந்தையா என்பது குறித்தும் போலீசார் துரித விசாரணை நடத்தி வருகின்றனர்.