1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (10:29 IST)

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்: தேர்ச்சி அளவுகோள் என்ன?

சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, விரைவில் சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆம், 12 ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களின் செயல்திறன் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு கணக்கிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.