செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (09:08 IST)

தமிழக முதல்வர் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரை பார்ப்பதற்காக முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தயாளு அம்மாளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva