1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS write a letter to PM Modi about Neet exam

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வரை அடுத்து பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

நீட் தேர்வு
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை போலவே நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது
 
இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வரை அடுத்து தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 20 ஆயிரமாக குறைந்தது கொரோனா பாதிப்பு!