வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 ஜூன் 2021 (06:40 IST)

கொரோனா நிவாரணம் 2வது தவணை ரூ.2000 எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது 
 
இரண்டாவது தவணையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் முதல்வர் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
ரூபாய் 2000 இரண்டாவது தவணை மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு ஆகியவை வழங்குவதற்கான டோக்கன் ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன்களின் அடிப்படையில் மளிகை பொருட்கள் மற்றும் ஒரு ரூபாய் 2000 ஜூன் 15 முதல் தொடர்புடைய நியாய விலை கடைகளில் 8 மணி முதல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
ஒரே நேரத்தில் ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பும் ஜூன் 15 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.