தொடர்புடைய செய்திகள்
- முதல்வராக இருந்தபோது ஈபிஎஸ் செய்த ஜனநாயக விரோத செயல்கள்: பட்டியல் வைத்திருக்கும் ஓபிஎஸ்
- அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி: அண்ணாமலை உறுதி!
- நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி! – எடப்பாடி பழனிசாமி!
- பருவ நெற்பயிர்களை காப்பீட்டு செய்ய வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் !
- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள்: புகழேந்தி பேட்டி
டிடிவி கூட்டணிக்கு ஆதரவு; பிரதமரை சந்திப்பேன்? – ஓபிஎஸ் ப்ளான் என்ன?
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர தயார் என டிடிவி தினகரன் கூறியதை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து பரபரப்புகள் இப்போதே எழ தொடங்கிவிட்டன. இதற்கிடையே அதிமுகவில் உட்கட்சி சிக்கல் இன்னும் தீராமல் இருப்பதால் அதிமுக நாடாளுமன்ற தேர்தலை எப்படி திட்டமிடப்போகிறது என்ற கேள்வியும் இருந்து வருகிறது.
சமீபத்தில் அதிமுக ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைய உள்ளதாக பேசியிருந்தார். கூட்டணியில் சீட்டு போடும் வகையில் பேசியுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், அதிமுக கூட்டணி அமைத்தால் அதில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாகவே உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பிதான். ஆனால் அரசியலில் நாங்கள் மாறுபட்ட பாதையில் பயணிக்கிறோம்” என கூறியுள்ளார்.
Edited By Prasanth.K
