1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (13:10 IST)

நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி! – எடப்பாடி பழனிசாமி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்கவிழா நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் நடந்து வருகிறது. இந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என கூறினார்கள். ஆனால் அனைத்து சதிகளையும் முறியடித்து ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றார். காலத்தால் அழியாத திட்டங்களை அதிமுக அளித்தது. ஆனால் அந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதற்கான தக்க பதிலடியை மக்கள் தேர்தல் சமயத்தில் அளிப்பார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் “அதிமுக மூன்றாக உடைந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஒன்றாகதான் உள்ளது. உடைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சித்தால் அது தோல்வியில்தான் முடியும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும்” என கூறியுள்ளார்.

Edited By Prasanth.K