அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி: அண்ணாமலை உறுதி!
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
இந்த நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறிய நிலையில் இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்
அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அவ்வாறு கூறுவதில் தவறில்லை என்றும் 2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
Edited by Mahendran