தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் இறந்தவரின் சடலம் மாற்றம்… தஞ்சாவூரில் நடந்த குழப்பம்!
- உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!
- கொரோனாவுக்கு ரூ.2 கோடி நிதி: விராட் கோலி & அனுஷ்கா சர்மாவுக்கு குவியும் பாராட்டு!
- மீண்டும் கழக ஆட்சி தலைவரே! – தந்தை படத்திற்கு மரியாதை செலுத்தி கண் கலங்கிய ஸ்டாலின்!
- ஆளுனர் வீட்டில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
ஸ்டாலினுடன் ஒரே மேஜையில் ஓபிஸ்… ஆளுனரின் தேநீர் விருந்து புகைப்படம்!
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து ஆளுநர் தேநீர் விருந்து அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பதவியேற்பு விழா முடிந்ததும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது ஆளுநர், ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அமர்ந்து தேநீர் அருந்தினார். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்திப்பதைக் கூட தவிர்த்துக்கொள்ளும் நிலையில் இந்த புகைப்படம் அரசியல் நாகரிகத்தை இருவரும் வெளிப்படுத்தியதாக பாராட்டப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
