திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (11:41 IST)

கொரோனாவுக்கு ரூ.2 கோடி நிதி: விராட் கோலி & அனுஷ்கா சர்மாவுக்கு குவியும் பாராட்டு!

நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொரோனாவை எதிர்த்து போராட ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளனர். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,14,91,598 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,34,083 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொரோனாவை எதிர்த்து போராட ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளனர். இது குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள அந்த ஜோடி அதில், 
 
நம் நாடு இப்படி பாதிக்கப்படுவதைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இரவும் பகலும் எங்களுக்காக போராடும் அனைத்து மக்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் இப்போது அவர்களுக்கு எங்கள் ஆதரவு தேவை, நாங்கள் அவர்களுடன் நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 
 
மேலும், #InThisTogether என்ற பெயரில் நிதி திறட்டவும் துவங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக கொரோனா முதல் அலையின் போது இருவரும் ரூ.3 கோடி நிதி வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இருவரின் இந்த முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.