வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (12:03 IST)

கொரோனாவால் இறந்தவரின் சடலம் மாற்றம்… தஞ்சாவூரில் நடந்த குழப்பம்!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாறியதாக உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள  கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுக்கு மேல்பட்ட ஆண் ஒருவர் கொரோனா காரணமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் அவர் இறந்துவிடவே பாதுகாப்பாக அவரது உடல் பேக் செய்யப்பட்டு உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. ஆனால் ஊருக்கு சென்ற பின்னர் அது தங்கள் உறவினரின் உடல் இல்லை என்பதை உறவினர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் அந்த உடலை மருத்துவமனைக்கே எடுத்து வந்து கொடுத்துள்ளனர். இது சம்மந்தமாக விசாரணை நடந்து வருவதாக சொல்லபடுகிறது.