1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (17:38 IST)

பெரியார் பல்கலைக்கழக விவகாரம்: ஓபிஎஸ் கண்டனம்

OPS
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வில் சாதி பற்றிய கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் இதற்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்
 
 இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை"
 
"எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்" -