1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sellur Raju say about eps and ops

பிரிந்து சென்றோர் மனம் திருந்தி வந்தால் ஏற்போம் -செல்லூர் ராஜூ

Sellur
பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
அதிமுக தற்போது இரண்டாவது உடைந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழுமையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப் பட வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து கூறிய போது பிரிந்து சென்றவர் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார் 
 
அதிமுக ஜாதி ரீதியான கட்சி அல்ல என்றும் ஜாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர்களை வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்
 
பிரிந்து  சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஎஸ் சந்தித்து வருத்தம் தெரிவித்தால் அவர் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!