திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (21:26 IST)

முரசொலி நில விவகாரம் குறித்து துணை முதல்வரின் அதிரடி கருத்து!

சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைப் பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தப் படத்தில் பஞ்சமி நிலம் குறித்து சொல்லப்பட்டிருந்த கருத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார் 
 
இந்த நிலையில் முரசொலி கட்டடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸின் கருத்துக்கு பதிலடி கொடுத்த முக ஸ்டாலின் முரசொலி கட்டிடத்தின் பட்டாவை டுவிட்டரில் பதிவு செய்தார் 
 
இதனை அடுத்து மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேட்க, அதற்கு முக ஸ்டாலின் பதிலுக்கு ஒரு சவால் விட, இருவரும் டுவிட்டரில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
 
இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ’முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை என்றும் அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு உரிய தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்