வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (15:34 IST)

இனிமேல் ’பேனர் ’வைக்க மாட்டோம் ! அதிமுக ’பிரமாண பத்திரம்’ தாக்கல் !

கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பணியை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து கந்தன்சாவடியில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் சுபஸ்ரீ. அப்போது, பள்ளிக்கரணை பகுதியில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர், நடுரோட்டில்  வைத்திருந்த போஸ்டர் காற்றில் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்து. இதில் நிலைதடுமாறி அவர் சாலையில் விழுந்தார். பின்னால் வந்த டேங்கர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. 
இந்த சம்பவத்தை அடுத்து, காவல்துறைக்கு  டிமிக்கு கொடுத்து தலைமறைவாக இருந்த பேனர் வைத்த ஜெயபாலை நீண்டநாள்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர். 
 
ஒரு உயிரிழப்புக்கு பின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என  உறுதியளித்தனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் தனது கட்சி சார்பில் பேனர் வைக்கமாட்டோம் என  உறுதி பிரமாணம் தாக்கல் செய்தார். ஆனாலும் ஆங்காங்கே சில  இடங்களில் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்கவே செய்துள்ளது. 
 
அதிலும் சீனா அதிபர் ஜிங்பின் - இந்திய பிரமர் மோடி சந்திப்பின்போது கூட அவர்களுக்கு வரவேற்பு அளிக்க , பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததையும் காணமுடிந்தது.
 
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து,  அதிமுக சார்பில், இன்று உயர் நீதிமன்றத்தில்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 
 
அதில், 'இனிமேல் அதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.