விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதை பாமக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட...