புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (18:33 IST)

நில அபகரிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரான மு க அழகிரி !

மதுரை திருமங்கலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மு க அழகிரி இன்று ஆஜராகியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் கலைஞரின் மகன்களில் ஒருவரான மு க அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி கட்டுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இது சம்மந்தமாக அழகிரி மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்களான மு.க.அழகிரி, சதீஷ்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேரும் இன்று ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மு க அழகிரி இப்போது எந்த விதமான அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.